பணக்காரர்கள் அதிகம் வாழும் நகரம் எது? ஒரு சுவாரஸ்ய கருத்துக்கணிப்பு

பணக்காரர்கள் அதிகம் வாழும் நகரம் எது? ஒரு சுவாரஸ்ய கருத்துக்கணிப்பு

உலகிலேயே பணக்காரர்கள் அதிகம் வாழும் நகரம் குறித்து ஒரு கருத்துக்கணிப்பு சமீபத்தில் நடந்து அதன் முடிவு தற்போது வெளிவந்துள்ளது.

இதன்படி மிகப்பெரும் பணக்காரர்கள் அதிகம் வாழும் நகரங்களின் தரவரிசையில் சீனாவின் ஹாங்காங் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. ஹாங்காங் நகரில் பத்தாயிரம் பெரும் பணக்காரர்கள் வாழ்வதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிபில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை முந்தி, சீனாவின் ஹாங்காங் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது

அமெரிக்காவின் நியூயார்க் நகரம் ஒன்பதாயிரம் பெரும் பணக்காரர்களுடன் இரண்டாம் இடத்தையும், ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. பிரான்ஸ் தலைநகர் பாரீஸ், பிரிட்டன் தலைநகர் லண்டன் ஆகியவை இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

இந்த கருத்துக்கணிப்பை வெல்த் எக்ஸ் என்கிற நிறுவனம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply