மீண்டும் டிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்பா?
சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் வரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்பு நடந்த நிலையில் மீண்டும் அமெரிக்க அதிபரை சந்தித்து பேச கிம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வடகொரிய அதிபர் கிம் ஜான் அன் டிரம்புக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மிகவும் நல்ல விஷயங்களை உள்ளடக்கிய நேர்மறையான கடிதமாக அமைந்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை அழிக்கும் நடவடிகைகளில் தொடர்ந்து கவணம் செலுத்தி வருவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கடிதத்தின் பிரதான நோக்கம் அதிபருடன் மீண்டும் சந்திப்பை திட்டமிடுவதே ஆகும், இந்த சந்திப்பை ஒருங்கிணைக்கும் வேலைகளில் ஏற்கெனவே நாங்கள் ஈடுபட தொடங்கிவிட்டோம். இவ்வாறு கிம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்
கிம் கடிதத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.