லிபியாவில் படகு கவிழ்ந்து 100 அகதிகள் பரிதாப பலி
லிபியா நாட்டின் கடல் பகுதியில் இருந்து சூடான், மாலி, நைஜீரியா, கேமரூன், கானா, லிபியா, அல்ஜீரியா, எகிப்து ஆகிய நாடுகளை சேர்ந்த அகதிகள் இரண்டு ரப்பர் படகுகளில் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று கொண்டிருந்தனர்.. அந்தப் படகுகளில் ஒன்று எதிர்பாராதவிதமாக திடீரென கடலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 100 அகதிகள் பரிதாபமாக பலியாகினர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் லிபிய கடலோரக் காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 276 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த தகவலை எல்லைகள் இல்லாத மருத்துவர்கள் அமைப்பு வெளியிட்டு உள்ளது.
அகதிகள் பாதுகாப்பு இன்றி கடல் பயணம் மேற்கொள்ள கூடாது என பலமுறை எச்சரித்தும் உயிரை பணயம் வைத்து இவ்வாறு சென்று வருவதாகவும், இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் லிபியா அரசு தெரிவித்துள்ளது.