ஆந்திரா, மேற்குவங்கத்தை போல் பெட்ரோல் வரி குறைக்கப்படுமா? முதல்வர் ஈபிஎஸ் பதில்

ஆந்திரா, மேற்குவங்கத்தை போல் பெட்ரோல் வரி குறைக்கப்படுமா? முதல்வர் ஈபிஎஸ் பதில்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை விண்ணை தொடும் அளவிற்கு தினந்தோறும் ஏறிக்கொண்டே சென்று கொண்டிருக்கும் நிலையில் மக்களின் சுமையை குறைக்க ஆந்திர அரசும், மேற்குவங்க அரசும் பெட்ரோலுக்கான மாநில வரியை குறைத்துள்ளன. இதேபோல் அனைத்து மாநில அரசுகளும், மத்திய அரசும் பெட்ரோல், டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது: பெட்ரோல், டீசலுக்கான வரியை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும். மாநில அரசு எப்படி குறைக்க முடியும்? மத்திய அரசுதான் உயர்த்திக்கொண்டே போகிறது. மாநில அரசு உயர்த்தவில்லை. இன்றைக்கு மாநிலத்தின் நிதி உங்களுக்கு நன்றாக தெரியும். இன்றைக்கு ஒவ்வொரு துறையிலும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து கொண்டிருக்கிறோம். தேவையான நிதி ஆதாரத்தை பெருக்குவதுதான் மாநில அரசினுடைய நிலை என்று கூறினார்.

எனவே பெட்ரோல் ,டீசலுக்கான வரியை தமிழக அரசு குறைக்க வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.

Leave a Reply