அமெரிக்கா அழுத்தம் எதிரொலி: இரானிடம் இருந்து விலகியிருக்க இந்தியா முடிவு

அமெரிக்கா அழுத்தம் எதிரொலி: இரானிடம் இருந்து விலகியிருக்க இந்தியா முடிவு

அமெரிக்காவின் பொருளாதாரத் தடையில் இருந்து தப்புவதற்காக ஈரானிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவை பாதியாக குறைக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஈரானுக்கு பொருளாதாரத் தடை விதித்துள்ள அமெரிக்கா, அடுத்த மாதம் 4 ஆம் தேதி முதல் ஈரானிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கும் நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், ஈரானிடம் இருந்து சீனாவுக்கு அடுத்த படியாக அதிக அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கு, அமெரிக்காவின் நடவடிக்கை சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகளை இந்தியா ஆதரிக்கா விட்டாலும், அந்நாட்டின் நெருக்கடயை தவிர்க்க வேண்டிய நெருக்கடி
ஏற்பட்டுள்ளது. இதனால், ஈரானிடமிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவை பாதியாக குறைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Leave a Reply