ஆபரேஷன் கமலா! கவிழ்கிறதா குமாரசாமி அரசு

ஆபரேஷன் கமலா! கவிழ்கிறதா குமாரசாமி அரசு

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் மிகக்குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்ற குமாரசாமி காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வரானார். இருப்பினும் ஒருசில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அதிருப்தி காரணமாக குமாரசாமியின் அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழ வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் குமாரசாமி ஆட்சியை கலைத்து, பாஜக ஆட்சியமைக்க முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மஜத தலைவர்களில் ஒருவரும் அமைச்சருமான, சா.ரா.மகேஷ் இதுகுறித்து கூறியபோது, 2008ம் ஆண்டு ஆபரேஷன் கமலா என்ற பெயரில், மெஜாரிட்டிக்கு குறைவாக இருந்த 3 எம்எல்ஏக்களை இழுத்து ஆட்சியமைத்தது பாஜக. அதேபோல இப்போதும் ஆபரேஷன் கமலாவை ஆரம்பித்துள்ளது என்று குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், பாஜக தனது வேலையை காட்டினால், காங்கிரஸ் சும்மா இருக்காது. பாஜகவை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் எங்களோடும், 5 எம்எல்ஏக்கள் மஜதவுடனும் தொடர்பில் இருக்கிறார்கள். பாஜகவை உடைக்க நாங்கள் தயங்க மாட்டோம் என எச்சரித்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. பாஜகவில் எந்த தலைவர் காங்கிரஸ் எம்எல்ஏக்களை ஈர்க்க முயன்றார் என தினேஷ் குண்டுராவ் பெயரை வெளியிட தயாரா” என பாஜக இணை செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் சவால் விடுத்தார்.

Leave a Reply