ஐதராபாத் தொகுதியில் என்னுடன் மோத தயாரா? அமித்ஷாஅவுக்கு சவால் விட்டவர் யார் தெரியுமா?
வரும் பாராளுமன்ற தேர்தலில் என்னை எதிர்த்து ஐதராபாத் தொகுதியில் போட்டியிட தயாரா? என பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவுக்கு மஜ்லிஸ் தலைவர் அசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இம்மாநிலத்தில் பாஜக தனித்து போட்டியிட்டு தனிப்பெரும் சக்தியாக உருவாகும் என்று கூறினார். தெலுங்கானா ராஷ்டரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், தனது சுயநலத்துக்காக சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு, உடனடியாக தேர்தல் வைக்க வேண்டும் என வற்புறுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் ஐதராபாத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தெஹாடுல்-முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி, வரும் பாராளுமன்ற தேர்தலில் என்னை எதிர்த்து ஐதராபாத் தொகுதியில் போட்டியிட தயாரா? என பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவுக்கு இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.