மோடி பிறந்த நாள்: கேக்கிற்க்கு பதில் லட்டு வெட்டிய அமைச்சர்கள்
உலகில் உள்ள அனைவரும் பிறந்த நாள் அன்று கேக் வெட்டுவதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் நேற்றைய பிரதமர் மோடியின் பிறந்த நாளில் மத்திய அமைச்சர்கள் ஜவடேகர், நக்வி ஆகியோர் லட்டு வெட்டி கொண்டாடினர்
பிரதமர் மோடியின் பிறந்த நாளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டிருந்த லட்டில் ஹேப்பி பர்த்டே மோடிஜி என்று எழுதப்பட்டிருந்தது. பிரதமரின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடிய மத்திய அமைச்சர்களான பிரகாஷ் ஜவடேகர் மற்றும் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர்களுக்கு பாஜகவினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி தனது பிறந்தநாளை தன்னுடைய தொகுதியான வாரணாசியில் கொண்டாடினார். வாரணாசிக்கு வந்த மோடியை உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். பள்ளிக் குழந்தைகளுடன் பேசிய அவர் கேள்வி கேட்க பயப்படவே கூடாது என்று அறிவுரை வழங்கினார்.