கருணாநிதிக்கு அரசு மரியாதை, அதிமுக போட்ட பிச்சை: கடம்பூர் ராஜூ

கருணாநிதிக்கு அரசு மரியாதை, அதிமுக போட்ட பிச்சை: கடம்பூர் ராஜூ

திமுக தலைவர் கருணாநிதிக்கு அளிக்கப்பட்ட அரசு மரியாதை அதிமுக போட்ட பிச்சை என அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளது திமுகவினர்களை ஆத்திரப்பட வைத்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவின்போது மெரினாவில் அவருக்கு இடம் தர தமிழக அரசு மறுத்தது. ஆனால் உயர்நீதிமன்றத்தின் ஆணையால் மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் அளிக்கப்பட்டது. அதிமுக அரசு நினைத்திருந்தால் இந்த விஷயத்தை சுப்ரீம் கோர்ட்டுக்கு எடுத்து சென்று காலம் கடத்தியிருக்கலாம். ஆனால் மேல்முறையீட்டுக்கு அதிமுக அரசு செல்லவில்லை

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியபோது, ‘கருணாநிதியின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது அதிமுக போட்ட பிச்சை என்றும், திமுக ஆட்சியில் இருந்திருந்தால் என்னென்ன சலுகைகள் கிடைத்திருக்குமோ அவை அத்தனையும் கருணாநிதிக்கு வழங்கப்பட்டதாகவும், எனவே அதிமுக மற்றும் அரசை பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு அருகதை இல்லை என்றும் கடம்பூர் ராஜூ கூறினார்.

Leave a Reply