பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மருத்துவமனையில் அனுமதி
கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் ஏற்கனவே உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மருத்துவ பரிசோதனைகளுக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுவொரு வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், லேசான காய்ச்சல் மற்றும் கண் மற்றும் மூட்டுகளில் வலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனைகள் செய்து, சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை முடிந்து நாளை அவர் பீகாருக்கு செல்வார் என தெரிகிறது.