தெலுங்கானா தேர்தல் கருத்துக்கணிப்பு: அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

தெலுங்கானா தேர்தல் கருத்துக்கணிப்பு: அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

தெலுங்கானாவில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மீண்டும் அதிக இடங்களை கைப்பற்றி சந்திரசேகரராவ் ஆட்சி அமைப்பார் என கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. அவருடைய கட்சிக்குக் 95 தொகுதிகள் கிடைக்கும் என கருத்துக்கணிப்பு கூறுகின்றது

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கு வெற்றி கிடைக்கும் என்று ஒரு சர்வே நடத்தப்பட்டது. அதில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 95 இடங்களை கைப்பற்றும் என்று தெரிய வந்துள்ளது. மொத்த வாக்காளர்களில் சுமார் 48 சதவீதம் பேரின் வாக்குகள் சந்திரசேகரராவ் கட்சிக்கு கிடைக்கும் என்று சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு 10 முதல் 20 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. முஸ்லிம் கட்சிக்கு 8 இடங்களும் பா.ஜ.க.வுக்கு 6 இடங்களும் மற்றவர்களுக்கு 3 இடங்களும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்-மந்திரியாக சந்திர சேகரராவ் மிக சிறப்பாக செயல்பட்டதாக 67.26 சதவீதம் பேர் திருப்தி தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. #Telan

Leave a Reply