புதிய தலைமை செயலகம் வழக்கு: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

புதிய தலைமை செயலகம் வழக்கு: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

திமுக ஆட்சிக்காலத்தில் புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரையடுத்து, அது குறித்து விசாரணை நடத்த 2012-ம் ஆண்டு, ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

ஆனால் இந்த ஆணையத்திற்கு  கடந்த 2015-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. இதுகுறித்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது செயல்படாத ஆணணயத்திற்கு ஏன் வீண் செலவு என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து அந்த ஆணையத்தை கலைக்க உத்தரவிட்டது

இந்த நிலையில் புதிய தலைமை செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடுகள் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்திற்கு புதிய நீதிபதியை நியமிப்பது தொடர்பாக வரும் 27-க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply