கட்சியிலும் – ஆட்சியிலும் கொல்லைப்புறமாக நுழைந்தவர் எடப்பாடி: மு.க.ஸ்டாலின்
கடந்த சில நாட்களாகவே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின் ஆளூம் கட்சியின் ஊழல் குறித்து தினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து வருவதாகவும் பொய் சொல்பவர்களுக்கு என ஒரு டாக்டர் பட்டம் இருந்தால் அது ஸ்டாலினுக்கே கிடைக்கும் என்றும் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நான் தினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக, ஊழல் பண மூட்டைகளில் அமர்ந்திருக்கும் முதலமைச்சர் கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி கட்சியிலும் – ஆட்சியிலும் கொல்லைப்புறமாக நுழைந்து, ஊழலில் சிக்கி நீதிமன்ற வாசலில் தொங்கிக் கொண்டிருப்பதன் விளைவே இந்த பதற்றம் நிறைந்த பேச்சு! என்று கூறியுள்ளார்.
அகில இந்திய அளவில் ஊழலுக்கு ஒரு தேசிய விருது கொடுக்க வேண்டும் என்று போட்டி நடைபெற்றால், அதில் முதல் விருதைப் பெறும் அத்தனை தகுதிகளும் இருக்கும் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களின் இந்த ஆணவப் பேச்சுக்கு,
அணி வகுத்து வரும் அவருடைய ஊழல் வழக்குகளே விரைவில் பதில் சொல்லும்!
— M.K.Stalin (@mkstalin) September 23, 2018
நான் தினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக, ஊழல் பண மூட்டைகளில் அமர்ந்திருக்கும் முதலமைச்சர் கூறியிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி கட்சியிலும் – ஆட்சியிலும் கொல்லைப்புறமாக நுழைந்து, ஊழலில் சிக்கி நீதிமன்ற வாசலில் தொங்கிக் கொண்டிருப்பதன் விளைவே இந்த பதற்றம் நிறைந்த பேச்சு!
— M.K.Stalin (@mkstalin) September 23, 2018