பாஜக தலைவர் பதவியை ஏற்க தயார்: எஸ்.வி.சேகர்

பாஜக தலைவர் பதவியை ஏற்க தயார்: எஸ்.வி.சேகர்

பாஜக தமிழக தலைவராக இருந்து வரும் தமிழிசை செளந்தரராஜனின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் தமிழக தலைவரை மாற்றும் நோக்கில் பாஜக மேலிடம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் பதவி எனக்கு வழங்கப்பட்டால் அதனை ஏற்க தயாராக இருப்பதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். மேலும் “பாஜக தலைமை ஏற்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அதை ஏற்பேன். தற்போது என்ன வாக்கு வங்கி பாஜகவுக்கு உள்ளதோ அதைவிட அதிகமாகவே எனால் வாங்கு வங்கியை வாங்கி காட்ட முடியும்” என்று நம்பிக்கையுடன் கூறினார்.

மேலும் கூட்டணி குறித்து எஸ்.வி.சேகர் கூறியபோது, ‘”அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் ஒரே கொள்கைதான். எனவே இரு கட்சிகளும் கூட்டணி வைத்தால் நல்லது என்று தெரிவித்தார்.

Leave a Reply