மெழுகுவர்த்தி வெளிசத்தில் சிகிச்சை தரும் டாக்டர்: ஒடிசாவில் அவலம்
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஆங்காங்கே மின்வெட்டு இருந்து வரும் நிலையில் ஒடிசா மாநிலத்தில் மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்கு மெழுகுவர்த்தி வெளிச்சத்திலும் மொபைல் போல் டார்ச் லைட்டுகளிலும் சிகிச்சை செய்வதாக கூறியுள்ளனர்.
நாள் ஒன்றுக்குக் தான் 180 முதல் 200 நோயாளிகளுக்கு சிகிச்சை தருவதாகவும், ஆனால் மின்வெட்டு காரணமாக பாதிக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சிகிச்சை தரும் அவல நிலை இருப்பதாகவும் ஒடிசாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.
ஒடிசா மாநில மின்சார துறை உடனடியாக மருத்துவமனை போன்ற அத்தியாவசிய இடங்களில் மின்வெட்டு ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.