மாதாந்திர பேருந்து கட்டணத்தை உயர்த்துவதா? ஸ்டாலின் கண்டனம்

மாதாந்திர பேருந்து கட்டணத்தை உயர்த்துவதா? ஸ்டாலின் கண்டனம்

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் விலையேறி கொண்டே செல்வதால் ஷேர் ஆட்டோ, ஆட்டோ கட்டணங்கள் உயர்ந்து கொண்டே வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில்தான் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதால் மீண்டும் ஒரு முறை பேருந்து கட்டணத்தை உயர்த்த முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது. மேலும் குறைந்தபட்சம் இடைத்தேர்தல் வரை பேருந்து கட்டணம் உயர வாய்ப்பில்லை

இந்த நிலையில் மாதாந்திர கட்டணம் தற்போது ரூ.1000ஆக இருக்கும் நிலையில் இதனை ரூ.1300ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் மாதாந்திர கட்டணத்தை பயன்படுத்தும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

இந்த நிலையில் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை ரூ1000-லிருந்து ரூ1300-ஆக அதிகரிக்கும் முயற்சியை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று திமுக தலலவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளா.ர் மேலும் போக்குவரத்து கழகத்தை லாபகரமாக இயக்க நடவடிக்கை எடுக்காமல் கட்டண உயர்வை அமல்படுத்த முயல்வது கண்டனத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply