ரபேல் ஒப்பந்தம் பரபரப்புக்கு மத்தியில் பிரான்ஸ் செல்லும் நிர்மலா சீதாராமன்
இந்தியா முழுவதும் தற்போது ரபேல் ஊழல் குறித்து பரபரப்பான செய்திகள் வெளியாகி வருகிறது. ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கோடி இதில் ஊழல் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்ற்ன.
இந்த நிலையில் இந்திய அரசு அம்பானி நிறுவனத்தை தவிர வேறு நிறுவனத்தை தேர்வு செய்யும் ஆப்சனை வழங்கவில்லை என முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஹோலண்ட்டோ கூறியது இந்த விஷயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ரபேல் பரபரப்புக்கு இடையே மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் பிரான்ஸ் செல்கிறார். பாரீசில் 12 மற்றும் 13-ந்தேதிகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மேலும் பிரான்ஸ் நாட்டின் ராணுவ மந்திரி புளோரன்ஸ் பார்லியை சந்தித்து பேசுகிறார். அப்போது மேற்கு ஆசியா மற்றும் இந்தோ- பசிபிக் கூட்டு ராணுவ பயிற்சியை விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது.