சபரிமலையில் பெண்களுக்கும் அனுமதி: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களையும் அனுமதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா அமர்வு அளித்துள்ள இந்த தீர்ப்பில் சபரிமலை கோவிலுக்குள் பெண்களை கட்டாயமாக அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐந்து நீதிபதிகளில் நான்கு நீதிபதிகள் பெண்களை சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்று தீர்ப்பு அளித்துள்ளதால் இனி பெண்களும் சபரிமலை ஐயப்பனை தரிசிப்பபதில் எந்த சிக்கலும் இருக்காது.
இந்த நிலையில் சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்வோம் என திருவாங்கூர் தேவஸம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.