ஓடுபாதையில் இருந்து நழுவி கடலில் இறங்கிய பயணிகள் விமானம்: பெரும் பரபரப்பு
பப்புவா நியூ கினியாவுக்கு சொந்தமான, நியூகினி விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று மைக்ரோனேசியா விமான நிலையத்தில் தரையிறங்கியபோது திடீரென ஓடுபாதையில் இருந்து நழுவி கடலில் விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து உடனடியாக மீட்புப்படையினர் விமானத்தில் இருந்த பயணிகளை காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
குறுகிய தூரத்துக்கு மட்டுமே ஓடுபாதை அமைந்திருந்ததால், இந்த விபத்து நேரிட்டிருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் விமானத்தின் பராமரிப்பும் சரியில்லை என்று கூறப்படுவதால் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.