சபரிமலை தீர்ப்பு குறித்து கமல்ஹாசன் கூறியது என்ன?
பொதுவாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் தான் அதிகம் கடவுள் குறித்த செய்திகளில் கருத்து சொல்வதுண்டு. அனைத்து சாதியினர்களும் அர்ச்சகர் ஆகலாம் என்று அதிக ஆர்வம் காட்டியது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சபரிமலை ஐயப்பனையே நம்பாத கமல்ஹாசன், ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை வரவேற்றுள்ளார். சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு நல்ல முடிவு என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இதேபோல் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என்றும், பெண்களுக்கு சம உரிமை உள்ளது என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்பு பிரதிபலித்துள்ளது என்றும் நடிகையும் காங்கிரஸ் பிரமுகருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.