5 கோடி ஃபேஸ்புக் கணக்குகளுக்கு ஆபத்தா? மார்க் சக்கர்பெர்க் அதிர்ச்சி தகவல்

5 கோடி ஃபேஸ்புக் கணக்குகளுக்கு ஆபத்தா? மார்க் சக்கர்பெர்க் அதிர்ச்சி தகவல்

5 கோடி ஃபேஸ்புக் கணக்குகளை அடையாளம் தெரியாத சிலர் ஊடுருவி அதை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டதாகவும் அதுமட்டுமின்றி பாதிக்கப்பட வாய்ப்புள்ள 4 கோடி பேரின் கணக்குகள் லாக் அவுட் செய்யப்பட்டதாகவும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் விளக்கம் அளித்துள்ளதுள்ளார். இருப்பினும் இந்த நிகழ்வின் காரணமாக யாரும் தங்கள் பாஸ்வேர்டை மாற்றத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இவ்வளவு ஃபேஸ்புக் கணக்கில் ஊடுருவி அதை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர்கள் யார் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை என்றும் அதே சமயம், இந்த செயலை செய்தவர்கள் பிறர் ஃபேஸ்புக் கணக்கை தவறாக கையாளவில்லை என்றும் அந்நிறுவனத்தின் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்னையை தங்கள் தொழில்நுட்ப வல்லுனர்கள் சரி செய்து விட்டதாகவும் இந்நிகழ்வு குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஃபேஸ்புக் கூறியுள்ளது.

Leave a Reply