மருத்துவத்துக்கான நோபல் பரிசை பெற்றவர்கள் யார் தெரியுமா?
ஒவ்வொரு ஆண்டும் உலகின் மதிப்பு மிகுந்த நோபல் பரிசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவத்திற்கான நோபல் பரிசு இந்த ஆண்டு அமெரிக்காவின் ஜேம்ஸ் பி.ஆலீசன் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த தசுகோ ஹோன்ஜோ ஆகிய இருவருக்கு பகிர்ந்து வழங்கப்பட உள்ளது. நோயெதிர்ப்பு மருத்துவ வல்லுநர்களான இவர்கள் புற்றுநோயைக் குணப்படுத்தும் மருத்துவ கண்டுபிடிப்பிற்காக இந்த உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இயற்பியலுக்கான நோபல் பரிசு நாளை அறிவிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 3-ம் தேதி வேதியியலுக்கான நோபல் பரிசும், 5-ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 8-ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது.