கூவத்தூரில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது: டிடிவி தினகரன்
கூவத்தூரில் என்ன நடந்தது என்பதை உயர்நீதிமன்ற நீதிபதி முன் தெரிவிப்பேன் என நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் கூறியதில் இருந்து தமிழக அரசியலில் பரபரப்பு பற்றி கொண்ட நிலையில் கூவத்தூரில் என்ன நடந்தது என்பது எனக்கும் சசிகலாவுக்கும் தெரியாது என அம்முக துணை பொதுச்செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் தினகரன் மேலும் கூறியதாவது: நானும் சசிகலாவும் கூவத்தூரில் இருந்தவரை பேரம் நடக்கவில்லை; நாங்கள் இல்லாதபோது என்ன நடந்தது என எங்களுக்கு தெரியாது’ என்று கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் இரண்டு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கவிருக்கும் திட்டம் குறித்து கூறியபோது, ‘கடலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கும் – என்றார்.