அமெரிக்கா இல்லாமல் 2 வாரம் கூட பதவியில் நீடிக்க முடியாது: சவுதி மன்னருக்கு டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்கா இல்லாமல் 2 வாரம் கூட பதவியில் நீடிக்க முடியாது: சவுதி மன்னருக்கு டிரம்ப் எச்சரிக்கை

நாங்கள் இல்லாமல் சவுதி அரேபிய மன்னரால் 2 வாரங்களுக்கு பதவியில் நீடிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களாக வடகொரியாவுடன் மோதிய அமெரிக்கா, சமீபத்தில் வடகொரியா அதிபருடனான சந்திப்புக்கு பின் இரு நாடுகளும் தற்போது இணக்கமாக உள்ளது.

ஆனால் சமீபத்தில் மன்னர் பதவியேற்ற சவுதி அரேபியாவின் சல்மான் பின் அப்துலஸிஸ் அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனமாக இருந்து வருகிறார். சவுதி அரேபியா கூடுதலாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வேண்டுகோளை அவர் நிராகரித்ததில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே பகை மூண்டுள்ளது.

இந்த நிலையில் ‘சவுதி அரேபியா பல ஆண்டுகாலமாக அமெரக்காவின் நட்பு நாடாக இருந்து வருகிறது. மேற்காசியாவில் மட்டுமின்றி உலக அளவில் பல்வேறு பிரச்சினைகளிலும் அமெரிக்காவுடன் கரம் கோர்த்து செயல்பட்டு வருகிறது. ஆனால் கச்சா எண்ணெய் விவகாரத்தில் சவுதி அரேபியா கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது கவலையளிக்கிறது.

அந்நாட்டின் பாதுகாப்புக்கு முழு பொறுப்பையும் அமெரிக்கா எடுத்துக் கொண்டுள்ளது. அமெரிக்கா இல்லாமல் சவுதி அரேபியாவால் நாட்டை பாதுகாக்க முடியாது. நாங்கள் இல்லாமல் அந்த நாடு நீடித்து இருக்க முடியாது. சவுதி மன்னர் சல்மான் பின் அப்துலஸிஸ் எனக்கு நல்ல நண்பர் தான். ஆனால் அமெரிக்கா இல்லாமல் இரண்டு வாரங்களுக்கு கூட அவரால் சவுதி மன்னர் பதவியில் நீடிக்க முடியாது’’ என ட்ரம்ப் கூறியுள்ளார்.

Leave a Reply