நள்ளிரவில் வெளுத்து வாங்கிய மழை: குளிர்ந்தது சென்னை

நள்ளிரவில் வெளுத்து வாங்கிய மழை: குளிர்ந்தது சென்னை

சென்னையில் கடந்த சில நாட்களாக பகலில் கடுமையான வெப்பம் இருந்து வரும் நிலையில் நேற்று நள்ளிரவு பல இடங்களில் நல்ல மழை பெய்தது. இதனால் சென்னையே குளிர்ந்ததால் மக்கள் உற்சாகமாகினர்.

சென்னையின் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கடற்கரைக்கு அருகில் உள்ள ஈ.சி.ஆர். சாலை, பெசன்ட் நகர், மெரினா கடற்கரை, ராயப்பேட்டை அண்ணா நகர் தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ததால் அந்த பகுதி மக்கள் வெப்பத்தில் இருந்து விடுதலை ஆனார்கள்

Leave a Reply