ஐயப்பன் கோவில் நிர்வாகமே அனுமதி வழங்கும் வரை நான் காத்திருப்பேன்: பிரபல நடிகை
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைந்து வழிபடலாம் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் வழங்கியது. இந்த தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பிரபல மலையாள நடிகை பாமா இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
மதம் மற்றும் கோவில் சம்பிரதாயங்களுக்கு நிறைய வழிமுறைகள் இருக்கிறது. எல்லா கோவில்களுக்கும் தனித்தனி விதிமுறைகள் இருக்கின்றன. அவைகள் மதிப்பானவை. ஒருவேளை எனக்கு இன்னும் சில காலங்களுக்கு உயிர்வாழும் வாய்ப்பு கிடைத்தால் இந்த மாதிரியான அதிரடி தீர்ப்புகள் மூலம் இல்லாமல் கோவில் நடைமுறைகளே சுவாமி ஐயப்பனை தரிசிக்க பெண்களுக்கு அனுமதி வழங்கும் வரை நான் காத்திருப்பேன். மேலும் மற்ற அனைத்து பெண்களுக்கும் நான் இதையே சொல்ல விரும்புகிறேன்’ என்று நடிகை பாமா கூறியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி தீர்ப்பை பெண்ணியம் பேசுபவர்கள் வரவேற்றாலும் ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்களுக்கு இந்த தீர்ப்பு நெருடலாக இருப்பதாகவே கருதப்படுகிறது