திருப்பரங்குன்றம் தொகுதி வழக்கு: 2 வாக்காளர்கள் எடுத்த அதிரடி முடிவு
மறைந்த திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. போஸ் அவர்களுக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த விருப்பம் தெரிவித்து வாக்காளர்கள் இரண்டு பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் அமோக வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் என்பவர் தொடர்ந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில் ஏ.கே.போஸ் திடீரென சமீபத்தில் மரணம் அடைந்தார். இதனால் திமுகவின் வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர்கள் எம்.போஸ் மற்றும் முத்துராஜ் ஆகியோர் இந்த வழக்கைத் தொடர விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை அக்டோபர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.