ஐந்து மாநில தேர்தல் தேதி: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஐந்து மாநில தேர்தல் தேதி: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய ஐந்து மாநில தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் சற்றுமுன் அறிவித்துள்ளார். ஒரு மினி பாராளுமன்ற தேர்தல் போல் இந்த தேர்தலை காங்கிரஸ் மற்றும் பாஜக எடுத்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் ஆணையரின் அறிவிப்பின்படி மத்தியப்பிரதேசம், மிரோசம் மாநிலங்களில் ஒரே கட்டமாக நவம்பர் 28-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும், அடுத்ததாக ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்திற்கு மட்டும் முதல் கட்டமாக நவம்பர் 12-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக நவம்பர் 20-ம் தேதியும் என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்றுமுதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் என்றும் தேர்தல் ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply