தேமுதிக தலைவர் ஆகின்றாரா விஜயகாந்த் மகன்?
ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் அந்த கட்சியின் வாரிசுகள் அரசியலில் இறங்கி வரும் நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தற்போது முழுநேர அரசியலில் இறங்கிவிட்டார்.
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் நடைபெற்ற தேமுதிகவின் 14-வது ஆண்டு விழாவில், விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகர், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பேசிய விஜயபிரபாகர், இளைஞர்கள் அனைவரும் தன்னுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும், அடுத்த தேர்தலில், தேமுதிக ஆட்சியைப் பிடிக்கும் என்றும் தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபிரபாகர், தான் தொடர்ந்து அரசியலில் ஈடுபட போவதாகவும், கட்சியில் பொறுப்பேற்பது குறித்து கட்சி தான் முடிவு செய்யும் என்றும் கூறினார்.