அமெரிக்கா: உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்
பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அமெரிக்க நீதிபதி பிரெட் கெவனா என்பவாருக்கு செனட் சபை ஆதரவளித்திருப்பதால் அவர் அந்நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார்…
உச்சநீதிமன்றத்தில் ஒன்பது பேர் கொண்ட அமர்வில் பிரெட் கெவனா சேருவாரா என்பதை உறுதி செய்யும் வாக்கெடுப்பு, இந்திய நேரப்படி நள்ளிரவில், செனட் சபையில் நடைபெற்றது. இதில், அதிகப்படியான வாக்குகள், பிரெட் கேவனா பதவியேற்க தடையில்லை எனக்கூறும் தனித் தீர்மானத்திற்கு கிடைத்திருக்கிறது.
இதன்மூலம், உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கிறார். பார்வையாளர் மாடத்தில் இருந்த போராட்டக்காரர்கள், பிரெட் கெவனாவுக்கு நீதிபதியாக ஆதரவளிக்காதீர் என தொடர்ந்து முழக்கமிட்டவாறு இருந்தனர்….
செனட் சபையில் ஆதரவு குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் அதிபர் டொனால்டு டிரம்ப், கேவனோவின் நியமனத்திற்கு ஆதரவாக வாக்களித்த செனெட் குறித்து பெருமைபடுவதாக குறிப்பிட்டிருக்கிறார். அண்மையில் பிரெட் கெவனா மீது பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இதற்கு அவர் மறுப்புத் தெரிவித்திருந்தார்.