3 மாநிலங்களில் வெற்றி யாருக்கு? கருத்துக்கணிப்பு தகவல்

3 மாநிலங்களில் வெற்றி யாருக்கு? கருத்துக்கணிப்பு தகவல்

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் நேற்று அறிவித்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவித்த தினத்தன்றே மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் வெற்றி பெறுவது யார்? என்பது குறித்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது.

இதில் மத்தியப் பிரசேதம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதாவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த மூன்று மாநிலங்களிலும் தற்போது பாஜக ஆட்சி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெலுங்கானாவில் மீண்டும் சந்திரசேகரராவ் அவர்களின் கட்சியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றும், மிசோரம் மாநிலத்தில் தற்போது ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துகொள்ளும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply