பிரமர் மோடி, முதல்வர் ஈபிஎஸ் டெல்லியில் சந்திப்பு
பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தமிழக முதலமைச்சர் பழனிசாமி நேற்று டெல்லிக்கு சென்றிருந்த நிலையில் சற்றுமுன் பிரதமரை முதல்வர் ஈபிஎஸ் சந்தித்தார்.
டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடு, தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் குறித்து இருவரும் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் தமிழக அரசியல் நிலவரம், நாடாளுமன்ற தேர்தலை அதிமுக-பாஜக இணைந்து சந்திப்பது குறித்தும் இருவரும் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது
மேலும் கடந்த சில நாட்களாக தினகரன் – ஓபிஎஸ் குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் பரபரப்பான செய்திகள் குறித்தும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.