நக்கீரன் கைது எதிரொலி: வைகோ போராட்டம்
பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைதை கண்டித்தும், அவரை சிறையில் பார்க்க அனுமதிக்காத காவல் துறையினரின் போக்கை கண்டித்தும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிந்ததிரிபேட்டை காவல்துறை அலுவலகத்தின் வெளியே வெயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் எந்த பிரச்சனை நடந்தாலும் முதல் ஆளாக குரல் கொடுப்பவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இந்த நிலையில் இன்று காலை பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யபப்ட்ட தகவல் அறிந்ததும் அவரை சந்திக்க சிந்ததிரிபேட்டை காவல்நிலையம் சென்றார். ஆனால் அவருக்கு கோபாலை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது.
இதனையடுத்து சிந்ததிரிபேட்டை காவல்துறை அலுவலகத்தின் வெளியே திடீரென தனது ஆதரவாளர்களுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் வைகோ. வைகோவும் அவரது ஆதரவாளர்களும் காவல்நிலையத்தின் வெளியே காவல்துறையை கண்டித்து கோஷமிட்டு வருகின்றனர்.