இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி நிருபர்களிடம் கூறியதாவது:-

அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி நிருபர்களிடம் கூறியதாவது:-

மேற்கு மத்திய அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 7-ந்தேதி புயலாக மாறியது. லூபன் என்று பெயரிடப்பட்ட இந்த புயல் மேலும் வலுப்பெற்று ஓமன், ஏமன், வளைகுடா நோக்கி நகர்ந்து செல்கிறது.

இதேபோல் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப் பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது புயலாக உருப்பெற்று ஒடிசா நோக்கி நகர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரபிக் கடல், வங்க கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாகி நகர்ந்து செல்வதால் தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும்.

சென்னையை பொறுத்த வரை பகலில் வெயில் அடிக்கும். இரவில் லேசான மழைக்கு வாய்ப்பு உண்டு.

மீனவர்கள் 10-ந்தேதி வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply