சிம்புவின் உடைமைகளை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு
‘அரசன்’ என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அட்வான்ஸ் வாங்கிய நடிகர் சிம்பு, அந்த படத்தில் நடிக்காமல் இழுத்தடித்ததாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் நடிகர் சிம்பு ரூ.85 லட்சத்தை திருப்பி கொடுக்காவிட்டால் அவரது வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிடப்படும் என நீதிமன்றம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொகையை திருப்பி கொடுக்க சிம்புவுக்கு நான்கு வாரங்கள் நீதிமன்றம் அனுமதி கொடுத்த நிலையில் தற்போது மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணையின்போது, ‘அரசன்’ படத்திற்காக பெற்ற முன்பணம் ரூ.50 லட்சத்தை வட்டியுடன் சேர்த்து தராவிட்டால் நடிகர் சிம்புவின் உடைமைகளை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.