சென்னை மின்சார ரயிலில் தானியங்கி கதவுகளா? தெற்கு ரயில்வே அறிக்கை

சென்னை மின்சார ரயிலில் தானியங்கி கதவுகளா? தெற்கு ரயில்வே அறிக்கை

பரங்கிமலை மின்சார ரயில் விபத்தை தொடர்ந்து ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்கக் கோரிய வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது இன்றைய விசாரணையின்போது தெற்கு ரயில்வே ஒரு அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

சென்னையில் இயங்கும் மின்சார ரயில்களில் தானியங்கி கதவுகளை பொருத்துவது தற்போது சாத்தியமில்லை; ரயில்களில் தானியங்கி கதவுகள் பொருத்தும் பட்சத்தில் காற்றோட்டம் இருக்காது புதிதாக தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகளில் மட்டுமே தானியங்கி கதவுகளை பொருத்த முடியும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது

மேலும் மின்சார ரயில்களில் தானியங்கி கதவுகள் பொருத்த ரூ3,500 கோடி செலவாகும் என்றும் தெற்கு ரயில்வே தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து பரங்கிமலை மின்சார ரயில் விபத்தை தொடர்ந்து ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்கக் கோரிய வழக்கின் விசாரணை நவம்பர் 2-ம் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply