மீண்டும் ஒரு ஜனநாயக படுகொலை, அராஜகங்கள்-அத்துமீறல்கள்: மு.க.ஸ்டாலின்
கூட்டுறவு சங்க தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாகவும், ஆளும் கட்சியினர்களுக்கு ஆதரவாக கூட்டுறவு தேர்தல் ஆணையமும் அதன் அதிகாரிகளும் நடந்து வருவதாகவும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் மு,க.ஸ்டாலின் தனது டுவிட்டரில், ‘உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக, ஆளும் அ.தி.மு.க அரசுக்கு ஆதரவாக மீண்டும் “ஒருதலைபட்சமாக” கூட்டுறவு சங்கத் தேர்தலை கூட்டுறவு தேர்தல் ஆணையமும், அதன் அதிகாரிகளும் நடத்தி வருவது ஜனநாயகப் படுகொலை! அராஜகங்கள் – அத்துமீறல்கள் – அதிகார துஷ்பிரயோகம் இதுவே அ.தி.மு.க வின் ஜனநாயகம் என்று கூறியுள்ளார்.
கூட்டுறவு சங்க தேர்தலை நடுநிலையோடு நடத்த வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சி தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்