டிசம்பர் 12ல் அரசியல் கட்சி அறிவிப்பா? ரஜினிகாந்த் பதில்

டிசம்பர் 12ல் அரசியல் கட்சி அறிவிப்பா? ரஜினிகாந்த் பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்தார். ஆனால் அடுத்த வருடம் டிசம்பர் மாதம் வரவுள்ள நிலையில் இன்னும் அவரது கட்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை

இந்த நிலையில் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளிவரும் என ரஜினிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்

சென்னை திரும்பிய ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, வரும் டிசம்பர் 12ஆம் தேதி எனது பிறந்த நாளில் கட்சி அறிவிப்பு வரும் என்ற தகவலில் உண்மை இல்லை. டிசம்பர் 12ஆம் தேதி கட்சி ஆரம்பிக்கவில்லை, அதே சமயத்தில், கட்சி தொடங்குவதற்கான பணிகள் 90% முடிவடைந்துவிட்டன’ என்று தெரிவித்தார்.

Leave a Reply