7 அவதூறு வழக்குகள்: நீதிமன்றத்தில் ஆஜரான திமுக தலைவர்
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதும் தற்போதைய அதிமுக அரசு சார்பாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் மீது 7 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகளின் விசாரணை, சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களின் குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. நீதிபதி சாந்தி இந்த வழக்குகளை விசாரணை செய்த நிலையில் இன்று அவ்ர் முன்பு மு.க. ஸ்டாலின் நேரில் ஆஜரானார்.
இதையடுத்து ஏற்கனவே இந்த வழக்குகளில் சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பெற்றுள்ள தடையை நீதிபதி ஏற்று கொண்டதை அடுத்து அவர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்குகளீன் அடுத்த விசாரணையை வரும் 31ஆம் தேதிக்கு நீதிபதி சாந்தி ஒத்தி வைத்தார். இதன்பிறகு, நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் எத்தனை வழக்குகளை போட்டாலும் சந்திக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.