3 மாதத்திற்குள் லோக் ஆயுக்தா: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் 3 மாதத்திற்குள் லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை அடுத்து வரும் பிப்ரவரி மாதத்திற்குள் தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்க தமிழக அரசுக்கு அவகாசம் வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கேட்டுக்கொண்ட நிலையில் தமிழக அரசு கேட்ட அவகாசத்தை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பது தொடர்பாக, அரசிடம் தகவல் கேட்டு இன்று பிற்பகல் 2 மணிக்கு நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசு வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா அமைக்க அஸ்வினி உபாத்யாயா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார் என்பதும் அந்த வழக்கின் அடிப்படையில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது