தபால் மூலம் கன்னடம் படிக்கின்றார் சசிகலா
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் கன்னடம் மொழி பயின்று வருவதாகவும், அவருடன் இளவரசியும் கன்னடம் பயின்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரும் தொலைதூர கல்வி மூலம் கன்னடம் மொழி சான்றிதழ் வகுப்பில் இணைந்து விட்டதாக பெங்களூரு பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வித்துறை இயக்குனர் மயிலரப்பா உறுதி செய்துள்ளார்.
கன்னட மொழியை தொலைதூர கல்வி வழியாக பயிலும் சசிகலா, இளவரசி ஆகிய இருவருக்கும் தேவையான கல்வி உபகரணங்கள் விரைவில் வைக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் ஆசிரியர்கள் நேரடியாக சிறைக்கு சென்று பயிற்சி அளிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.