இந்திய சேனல்களுக்கு பாகிஸ்தான் தடை: உச்சநீதிமன்றம் அதிரடி
இந்திய திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்புவது குறித்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சகிப் நிசார் விசாரணை செய்தார்
விசாரணையின்போது நீதிபதி, இந்தியாவின் சேனல்களுக்கு தடை விதித்தால் என்ன? என கேள்வி எழுப்பினார். அதனையடுத்து இந்தியாவின் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப பாகிஸ்தானின் உள்நாட்டு ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் கடந்த 2016ஆம் ஆண்டு பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் ரேடியோ மற்றும் சேனல்களில் இந்திய நிகழ்ச்சிகள், படங்களுக்கு தடை விதித்தது என்பதும் அந்த தடை கடந்த ஆண்டு விலக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.