எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே காரணம் சசிகலாதான்: திவாகரன்

எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே காரணம் சசிகலாதான்: திவாகரன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் நடந்து வரும் எல்லா பிரச்சனைகளுக்கும் சசிகலாதான் காரணம் என திவாகரன் கூறியுள்ளார்.

சசிகலா சிறைக்கு செல்லுமுன் டிடிவி தினகரனை துணைப்பொதுச் செயலாளராக நியமித்தது தான் அவர் செய்த மிகப்பெரிய தவறு. அதன்பின்னர் தான் அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினா்களை அ.தி.மு.க. திரும்ப அழைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிது. ஆனால், அவா்களை யாரோ தடுத்து நிறுத்துகின்றனா்.

டிடிவி தினகரனை பொறுத்தளவில் அ.தி.மு.க.வுடன் சண்டை போடுவதும், அந்த இயக்கத்தை கைப்பற்ற நினைப்பதும் தான் அவரது குறிக்கோளாக உள்ளது. எங்கள் இயக்கத்தில் இருவர் இருந்தால் கூடபோதும். அதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை என்றார் திவாகரன்.

 

Leave a Reply