நகைக்கடை திறக்க வந்த கீர்த்திசுரேஷ்: ரசிகர்கள் திரண்டதால் போலீஸ் தடியடி
பிரபல நடிகை கீர்த்திசுரேஷ், திருப்பத்தூரில் நகைக்கடை ஒன்றை திறக்க வந்தபோது அவரை பார்க்க கட்டுக்கடங்காத அளவில் ரசிகர்கள் கூடியதால் போலீசார் தடியடி நடத்தினர்
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள ஒரு நகைக்கடையின் புதிய கிளைக்கு திறப்பு விழாவுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கீர்த்தி சுரேஷ் வந்த தகவலறிந்த அவரது ரசிகர்கள் அவரை காண காலை முதலே நகைக்கடை முன் திரளத் தொடங்கினர். இதனால் போக்குவரத்து முடங்கியது
நகைக்கடையை திறந்து வைத்த பின்னர் ரசிகர்களின் கூட்டம் காரணமாக கீர்த்திசுரேஷ் வெளியே செல்ல முடியவில்லை. இதனையடுத்து போலீசார் சிறிய அளவில் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதன்பின் கிடைத்த சிறிய பாதையில் கீர்த்திசுரேஷின் கார் ஊர்ந்து சென்றது.