ஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கமா? அதிர்ச்சி தகவல்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி எடப்பாடி அரசுக்கு எதிராக ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்கள் 11 பேரும் வாக்களித்தனர். எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த 11 போரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரிக்கை விடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஏற்கனவே அதிமுக எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மூன்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதால் அவர்களது எம்.எல்.ஏ பதவியும் தகுதிநீக்கம் செய்யப்படலாம்
இந்த நிலையில் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களும் ஒருவேளை நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அதிமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிடும் அபாயம் உள்ளது.