ராகவா லாரன்சுக்கு பதில் பள்ளிக்கு சென்ற ஓவியா
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் ‘காஞ்சனா 3’ படத்தில் ஓவியா நாயகியாக நடித்து வருகிறார் என்பதும், இந்த படம் முடியுந்தருவாயில் இருக்கின்றது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் சமீபத்தில் இரண்டு பள்ளிகளை தத்தெடுத்தார். சென்னை பாடி அருகிலுள்ள அரசாங்க பள்ளி மற்றும் செஞ்சி அருகிலுள்ள பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளை தத்தெடுத்த அவர் அந்த பள்ளிகளுக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை வாங்கி கொடுத்தார்.
அந்த வகையில் தற்போது அந்த இரண்டு பள்ளிகளும் புதுப்பொலிவு பெற்று நேற்று திறப்பு விழா கண்டது. ஆனால் இந்த திறப்பு விழாவுக்கு ராகவா லாரன்ஸ் அவர்களால் செல்ல முடியவில்லை. எனவே அவருக்கு பதில் நடிகை ஓவியா செஞ்சி அருகே உள்ள பள்ளிக்கு சென்று விழாவில் கலந்து கொண்டார். ராகவா லாரன்ஸ் போல் பலரும் முன்வந்து பள்ளிகளை தத்தெடுக்க வேண்டும் என்று ஓவியா கேட்டுக்கொண்டார்.
இந்த விழாவில் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசியபோது, ‘பள்ளிகள் தான் எதிர்கால சந்ததிகளை வடிவமைக்கும் கோவில், வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மாணவர்கள் மாணவிகள் கல்வி கற்க அடைக்கலமாகும் இடம் அரசாங்க பள்ளிகள் தான். அரசாங்கத்தோடு இணைந்து மக்களும் தரம் உயர்த்தினால் தான் பள்ளிகளில் படிக்கும் மாணவ – மாணவிகள் நல்ல கல்வியை கற்க முடியும்”