10 லட்சத்தில் 4 பேருக்கு மட்டுமே இருக்கும் ரத்தவகை உள்ளவர்களுக்கு ஒரு அறிவிப்பு

10 லட்சத்தில் 4 பேருக்கு மட்டுமே இருக்கும் ரத்தவகை உள்ளவர்களுக்கு ஒரு அறிவிப்பு

பாம்பே ஓ பாசிட்டிவ் என்ற வகை ரத்தமானது 10 லட்சம் பேரில் வெறும் 4 பேருக்கு மட்டுமே இருக்கும் என்றும் எனவே இந்த அரிய வகை ரத்தம் உள்ளவர்கள் ரத்த வங்கியில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இதுகுறித்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனை டீன் பொன்னம்பல நமச்சிவாயம் கூறுகையில், ‘பாம்பே ஓ என்ற ரத்தம் மிகவும் அரிதானது. 10 லட்சம் பேரில் நான்கு பேருக்கு மட்டும் தான் இருக்கும். முதலில் 1952ம் ஆண்டு பாம்பேயில் இது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், இதற்கு பாம்பே ஓ என்று பெயர் வந்தது. இந்த வகை ரத்தம் கிடைப்பது மிகவும் அரிது என்பதால், பாம்பே ஓ ரத்தம் உள்ளவர்கள் தங்களது விபரங்களை ரத்த வங்கியில் பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதனால் அவசர காலக்கட்டங்களில் ரத்தம் தேவைப்படும் போது உதவ முடியும்’.

Leave a Reply