ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்ய, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்ய, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

ஆன்லைனில் மருந்துகள் விற்கப்படுவதை தடை செய்ய கோரி தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்ய, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்டுள்ளது

ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டால் பொதுமக்களுக்கு காலாவதியான, போலியான, தவறான மருந்துகள் விற்பனை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும், ஆன்லைலில் மருந்துகள் வாங்குவது, மற்றும் விற்பனை செய்வது என்பது பொதுமக்கள் உயிருக்கு அபாயகரமானது, சட்டவிரோதமானது எனவும் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் தங்களது மனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், ஆன்லைனில் மருந்து விற்பனை செய்வதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையையும் 2 வாரத்திற்கு தள்ளிவைத்தார். மேலும் மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சகங்கள் பதில் அளிக்கவும் நீதிபதி மகாதேவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply