கூகுள் சான்று பெற்று ஐஃபால்கன் நிறுவனம் அறிமுகம் செய்த ஆண்ட்ராய்டு டிவி
கூகுள் நிறுவனத்தின் சான்று பெற்று உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஐஃபால்கன் நிறுவனம் 2 புதிய ஆன்ட்ராய்டு டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
ஐஃபால்கன் 40எஃப்2ஏ மற்றும் ஐஃபால்கன் 49எஃப்2ஏ என்ற இந்த மாடல்களில் ஏ.ஐ. அசிஸ்டன்ட், ஆன்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளம் போன்ற முக்கிய அம்சங்கள் உள்ளன. மேலும் ஐபிக்யூ என்ஜின், மைக்ரோ டிம்மிங், டால்பி சரவுன்ட் சவுன்ட், கூகுள் குரோம்காஸ்ட், வெள்ளை நிற எல்.இ.டி. ஹெச்.டி. பேக்லிட் ஆகிய அம்சங்களுடன் பில்ட்-இன் கூகுள் அசிஸ்டன்ட், ஏ.ஐ. மூலம் இயங்கும் விர்ச்சுவல் சூப்பர் அசிஸ்டன்ட் ஆகிய சிறப்புகளும் உள்ளன.
புதிய ஐஃபால்கன் 40எஃப்2ஏ மற்றும் 49எஃப்2ஏ மாடல்களின் விலை ரூ.19,999 மற்றும் ரூ.27,999 முறையே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பதும் இந்த இரண்டு மாடல்களும்பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது