தேனி நியுட்ரினா திட்டத்திற்கு இடைக்கால தடை: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
தேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இடைக்காலத் தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த கடந்த சில மாதங்களுக்கு முன் மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. இந்த அனுமதியை எதிரத்து பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பு தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது
இந்த வழக்கின் விசாரணைகள் அனைத்தும் கடந்த அக்டோபா் மாதமே முடிவடைந்த நிலையில் இன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கு குறித்த இன்று தீர்ப்பை வழங்கியது. இதன்படி தேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது